ஆசிரியர்களுக்கு 'ஹெல்மெட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
02:09

திருப்பூர்:'இரு சக்கர வாகனத்தில் வரும்போது, ஆசிரியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பள்ளிகளுக்கு வர வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை அனுப்பிய சுற்றறிக்கை:பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது, கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும்.


தினமும் காலை வழிபாட்டு கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும், பள்ளி முடிந்து வெளியே வரும்போது, கூட்ட நெரிசலால், பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களை பிரித்து, 15 நிமிட இடைவெளியில் வெளியே அனுப்ப, பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக்கில், பள்ளிக்கு வர மாணவருக்கு அனுமதி வழங்கக் கூடாது.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த,வருவாய் மாவட்ட வாரியாக, சாலை பாதுகாப்பு மன்றம் துவங்கப்படுகிறது.


போக்குவரத்து கமிஷனர், கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், மாணவர்களை கொண்ட குழு உருவாக்கப்படும். இதன்கீழ், பள்ளி உடற்கல்வி ஆசிரியர், வாரத்துக்கு ஒரு மணி நேரம், அருகிலுள்ள பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்தை சீர் செய்து, மாணவருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X