மையத்தடுப்பு இல்லாததால் ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
01:47

பல்லடம்:பல்லடத்தில், என்.எச்.ரோட்டில், மையத்தடுப்பு மீது மோதி, ஒரே நாளில் மூன்று விபத்துகள் ஏற்பட் டதால், அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.வாகன போக்குவரத்து நிறைந்த பல்லடம்என்.எச்., ரோட்டில், நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


விபத்துகளை தடுக்கும் வகையில், நகராட்சி எல்லைக்கு உட்பட்டு, என்.எச்.,ரோடு முழுவதும் மையத்தடுப்புகள் வைக்கப்பட்டன.ஆனால், செட்டிபாளையம் பிரிவு அருகே, ஏறத்தாழ, 200 மீ., துாரத்துக்கு மையத்தடுப்புகள் வைக்கப்படாமல் இடைவெளி விடப்பட்டது. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகனங்கள், மையத் தடுப்புகள் இருப்பது தெரியாமல், அவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன. அவ்வகையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 20க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன.விபத்துகளை தடுக்கும் வகையில், மையத்தடுப்புகளை செட்டிபாளையம் பிரிவு முதல் அண்ணா நகர் வரை, விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். வழக்கம்போல, அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்ததால், கடந்த ஒரு மாதத்துக்கு முன் நடந்த விபத்தின் போது, அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று கூறி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மையத்தடுப்புகளை விரிவுபடுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள், மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் அதன்பின், இன்று வரை மைய தடுப்புகள் வைக்கப்படவில்லை. நேற்று முன் தினம், ஒரே நாளில், மூன்று வாகன விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயமடைந்தனர். இவ்வாறு தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்த போதும், மையத்தடுப்புகளை விரிவு படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:பல்லடம் என்.எச்., ரோட்டில், மையத் தடுப்புகள் வைக்கப்பட்டதால், விபத்துகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தன. ஆனால், செட்டிபாளையம் பிரிவு அருகே, மையத் தடுப்புகள் அமைக்கும் பணி பாதியோடு கைவிடப்பட்டன. அதன் காரணமாக, வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.நேற்று (நேற்று முன் தினம்), டூவீலர், சரக்கு லாரி, மற்றும் சரக்கு வேன் உள்ளிட்ட மூன்று வாகனங்கள், மையத்தடுப்புகள் இருப்பது தெரியாமல் அவற்றில் மோதி விபத்துக்குள்ளாயின.


நால்ரோடு சிக்னல் முதல், தொடர்ச்சியாக மையத்தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், செட்டிபாளையம் பிரிவில் மட்டும், ஒரு சிலருக்காக பாரபட்சத்துடன் இடைவெளி விட்டுள்ளனர்.தடுக்க வேண்டிய அதிகாரிகளே, விபத்து ஏற்பட முக்கிய காரணமாக உள்ளனர். எனவே, மீண்டும் விபத்துகள் ஏற்படும் முன், மையத்தடுப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரோடு விரிவாக்கம்தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா கூறுகையில், ''செட்டிபாளையம் பிரிவு அருகே, என்.எச்., ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. எனவே வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படும் என்பதால், அப்பகுதியில் மையத்தடுப்புகள் வைக்கப்படவில்லை.ரோட்டை விரிவுபடுத்துவதற்கான, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, ரோட்டை விரிவுபடுத்தியபின், மையத் தடுப்புகள் வைக்கலாம் என்பதால், பணிகளை கைவிட்டோம்,'' என சமாளித்தார்.நடவடிக்கை தேவைரோடு விரிவாக்கம் செய் யப்பட, இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியவில்லை.


ஆனால், அதைக்காரணம் காட்டி, மையத்தடுப்புகள் வைக்காமல், அதிகாரிகளே விபத்து ஏற்பட காரணமாக இருப்பதை ஏற்க முடியாது. பல்லடம் நகரின் பல இடங்களில், ஏராளமான மைய தடுப்புகள் பயன்பாடின்றி கிடக்கின்றன.அவற்றை பயன்படுத்தி, விபத்துகளை தடுக்கும் வகையில், தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கினால், விபத்துகள் ஏற்பட்டு வருவது, பல்லடத் தில் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X