| அண்ணி வெட்டிக் கொலை: கைதானவரிடம் விசாரணை Dinamalar
அண்ணி வெட்டிக் கொலை: கைதானவரிடம் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
02:10

உடுமலை:உடுமலை அருகே, அண்ணியை அரிவாளால் வெட்டிக்கொன்றவரை, போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை, பெரியகோட்டை பிரிவு, எஸ்.வி.,புரம் ஜெ.ஜெ.,நகரை சேர்ந்த, திருமலைசாமி மனைவி சுமதி, 24. மூன்று வயதில் குழந்தை உள்ளது. நேற்று காலை, வீட்டில் இருந்த போது, திருமலை சாமியின் பெரியப்பா மகன் கணேசன், 23, அவரை அரிவாளால் வெட்டி கொன்றார். சுமதியின் சப்தம் கேட்டு, அருகில் உள்ளவர்கள் வந்த போது தப்பினார். உடுமலை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சுமதியின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.போலீசார் கூறியதாவது: சுமதிக்கு, ஏற்கனவே, இருவருடன் திருமணம் நடந்து, அவர்களை விட்டு பிரிந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன், திருமலைசாமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். விவசாயப் பணிக்கு சென்ற போது, சுமதிக்கு, கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். கணேசன், வீட்டுக்கு சென்ற நிலையில், இருவரிடையை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர், அரிவாளால் வெட்டிக் கொன்று தப்பினார்.எஸ்.வி.,புரம், ரயில்வே தண்டவாளத்தை நோக்கி ஓடியவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் ரயில் வராததால் போலீசாரிடம் சிக்கினார். இவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X