எஸ்டேட்களில் வாழை பயிரிடாதீங்க! திரும்ப திரும்ப வலியுறுத்தும் வனத்துறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:01

வால்பாறை:வால்பாறையில் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், வாழை பயிரிட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை உள்ளது. இங்குள்ள மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும் அரிய வகை வனவிலங்குகள் உள்ளன.


குறிப்பாக, வரையாடு, சிங்கவால் குரங்கு, இருவாச்சிப்பறவை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இது தவிர, எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள துண்டு சோலையில் யானைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளன.


வால்பாறையில் பருவமழைக்கு பின் பசுமை திரும்பியதால், கடந்த ஆண்டு கேரளா வனப்பகுதிக்கு சென்ற யானைகள் மீண்டும் வால்பாறைக்கு திரும்பியுள்ளன.பகல் நேரத்தில் தேயிலை காட்டில் முகாமிடும் யானைகள், இரவு நேரத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழைகளை உட்கொள்கின்றன.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒற்றையானை முகாமிட்டுள்ளது. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழைகளை உட்கொள்கின்றன. ஒற்றை யானை தொடர்ந்து அதே பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.


வால்பாறை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விதிமுறையை மீறி, யானைகளுக்கு மிகவும் பிடித்தமான வாழையை வளர்க்கின்றனர். வாழை பயிரிடக்கூடாது என்று ஏற்கனவே பல முறை அந்தந்த எஸ்டேட்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.


இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு யானைகள் வருவதை தவிர்க்க வாழை, பலா போன்ற மரங்களை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.பருவமழைக்கு பின் வால்பாறையில் பசுமை திரும்பியுள்ளதால், கேரள யானைகள் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளன. எனவே, யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகம் அனுமதிக்க கூடாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
21-ஆக-201912:02:19 IST Report Abuse
TamilArasan மனுஷனுக்குத்தாம்பா எல்கை எல்லாம் உண்டு அதிலும் தனி நாடு என்று பிரிவினை எல்லாம் பேசுற சுடலை போண்டோருக்குத்தான் எல்கை...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
20-ஆக-201922:43:20 IST Report Abuse
bal எஸ்டேட் ஓனர் ராசாவிடமோ சுடலையிடமோ சொல்லுங்கள்...
Rate this:
Share this comment
V.MOHAN - CHENNAI,இந்தியா
24-ஆக-201915:32:16 IST Report Abuse
V.MOHANமரியாதையாக விமர்சனம் மாந்தர் அழகு...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஆக-201913:26:58 IST Report Abuse
மலரின் மகள்கள் அது என்ன கேரளா யானை? யானைகளுக்கும் மாநில மாவட்ட வேறுபாடுகள் உள்ளதா?
Rate this:
Share this comment
sri - trichy,இந்தியா
21-ஆக-201915:45:44 IST Report Abuse
sriயானைக்கு வாழை தராத மோடி ஒழிக RSS ஒழிக. நங்கள் சேர்ந்து கையெழுத்து போடு கடிதம் எழுதுவோம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X