சர்வீஸ் ரோட்டில் மஞ்சள் கோடு விபத்தை தவிர்க்க நடவடிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சர்வீஸ் ரோட்டில் மஞ்சள் கோடு விபத்தை தவிர்க்க நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:09

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள, சர்வீஸ் ரோட்டின் நடுவே மஞ்சள் நிற குறியீடு போடும் பணி நடக்கிறது.கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள சர்வீஸ் ரோட்டின் இரண்டு பக்கங்களிலும், மழை நீர் வடிகால் கட்டப்பட்டது.


இதனை தொடர்ந்து, முதல் கட்டமாக தார்ரோடு போடப்பட்டு, மேம்பாலத்தின் மேல் இருந்து வரும் மழைநீர் கீழே கொண்டு வர, குழாய்கள் அமைக்கப்பட்டது.மேம்பாலத்தின் கர்டர் பகுதியில் சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டு ஒளிர்கின்றன.மேலும், சென்டர் மீடியானில் அழகு செடிகள் வளர்க்கப்படுகிறது.


சர்வீஸ் ரோட்டில் இறுதிகட்ட தார்ரோடு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.இதனை தொடர்ந்து, ரோட்டின் இரண்டு பக்கங்களில் மஞ்சள் நிற குறியீடு போடப்படுகிறது. ரோட்டின் எல்லையிலும், மையப்பகுதியிலும் குறியீடு அமைக்கப்படுகிறது.இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதை தவிர்க்க, இந்த குறியீடு பயனுள்ளதாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வீஸ் ரோடு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X