பள்ளிக்கு கூடுதல் கட்டடம்: பொள்ளாச்சி எம்.பி.,க்கு மனு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பள்ளிக்கு கூடுதல் கட்டடம்: பொள்ளாச்சி எம்.பி.,க்கு மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:14

பொள்ளாச்சி:தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் வசதிக்காக கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொள்ளாச்சி எம்.பி., யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகேயுள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, எம்.பி., சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.


அப்போது, பள்ளி தலைமையாசிரியர் கணேசன், எம்.பி., யிடம் கொடுத்த மனு:தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில் இருந்த வகுப்பறைகள், கழிப்பிடம், சுற்றுச்சுவர், கடந்த, 2017ம் ஆண்டு சாலை விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்டது. தற்போது, மாணவர்கள் அமர்ந்து படிக்க போதுமான வகுப்பறைகள் இல்லை.மாணவர்களின் நலனை கருதி, மூன்று வகுப்பறை கட்டடம், மாணவர்கள் பயன்படுத்த கழிப்பிடம் மற்றும் சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X