பெலாந்துறை அணையில் இருந்து தண்ணீர் செல்வதில்... சிக்கல்! பாசன ஏரி கிளை வாய்கால்களை தூர்வார கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:31

பெண்ணாடம் : பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து பாசன ஏரிகளுக்கு செல்லும் கிளை வாய்க்காலை பருவ மழை துவங்கும் முன், துார வார வேண்டும் என 50 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 1876ல் 200.80 மீட்டர் நீளத்திற்கு அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் மழை காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கிளை வாய்கால்கள் வழியாக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள சேதுவராயன்குப்பம் ஏரி, ஆனந்தகுடி, டி.வி.புத்துார், ராஜேந்திரபட்டினம், பூண்டி, கொக்கரசன்பேட்டை, வண்ணாங்குடிகாடு, நெசலூர், குணமங்கலம் ஏரி உட்பட 18 பொதுப்பணித்துறை சொந்தமான ஏரிகள் நிரம்புவது வழக்கம்.



அதன் மூலம் இப்பகுதிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 234 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்த நீரை பயன்படுத்தி, பெலாந்துறை, பாசிக்குளம், கணபதிகுறிச்சி, ஸ்ரீமுஷ்ணம், ராஜேந்திரபட்டினம், பாளையம்கோட்டை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு பயிர் செய்து பயனடைந்து வருகின்றனர்.



இந்நிலையில், அணைக்கட்டின் இருபுறம் மற்றும் பாசன கிளை வாய்க்கால்களில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து மண்டியுள்ளன. பல இடங்களில் துார் வாராததால் செடி, கொடிகள் அதிகளவில் மண்டியும், கரைகள் வலுவிழந்தும் உள்ளன.இதற்கிடையே வடகிழக்கு பருவ மழை இரு மாதங்களில் துவங்க உள்ளது. இதனால் பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து பாசன வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் திறந்து விடும்போது, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 18 ஏரிகளும் முழு கொள்ளளவு நிரம்புவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் சம்பா நடவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, அணைக்கட்டில் இருந்து பாசன ஏரிகளுக்கு செல்லும் கிளை வாய்க்காலை துார வார வேண்டும் என 50 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து, பெலாந்துறை விவசாயி ஒருவர் கூறுகையில், 'பெலாந்துறை அணைக்கட்டு, பாசன கிளை வாய்க்காலின் கரைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. வாய்க்கால் நெடுகிலும் மரங்கள், செடி, கொடிகள் அதிகளவில் மண்டிள்ளன. பெலாந்துறை பகுதியிலேயே இந்த நிலை என்றால், கடைமடையில் உள்ள ஏரிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்வதும் சந்தேகம் தான். எனவே, வட கிழக்கு பருவமழை துவங்கும் முன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X