| திருவள்ளூர் கலெக்டர் அலுவலகமா... காயலான் கடையா? Dinamalar
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகமா... காயலான் கடையா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:32

திருவள்ளூர்: முறையான பராமரிப்பு, சுகாதாரமின்மை, ஊழியர்களின் அலட்சியம் போன்ற காரணங்களால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், காயலான் கடை போல மாறி வருகிறது.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என மூன்று தளங்களை உடையது. இவ்வலுவலகத்தில், கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உட்பட, மாவட்ட தலைமை அலுவலக அதிகாரிகள் அனைவருக்கும், இங்கு அலுவலகம் செயல்படுகிறது.பல்வேறு பணி நிமித்தமாக, பொதுமக்கள், பார்வையாளர்கள் என, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர், இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர் கூட்டம், மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் போது, 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கலெக்டர் அலுவலகம், முறையான பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் அலட்சிய போக்கால், காயலான் கடை போல குப்பையாக காட்சியளிக்கிறது.முதல் தளத்தில், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகிலும், இரண்டாவது தளத்திலும், பல்வேறு பொருட்கள், குப்பை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் கனவு திட்டமான, தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட தொட்டில், குப்பை வண்டி அருகில் வீசப்பட்டு உள்ளது.இப்படி, ஊழியர்களின் அலட்சியத்தால், கலெக்டர் அலுவலகம், காயலான் கடை போல காட்சியளிக்கிறது. இதை கவனித்து, அலுவலக வளாகத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டிய, கலெக்டரின் நேர்முக உதவியாளரோ, அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, கலெக்டர் ஒருமுறை, அலுவலக வளாகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தால், உண்மை நிலை தெரிய வரும், என, ஊழியர்கள் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்.கால்நடைகள் தாராளம்மரக்கன்றுக்கு அபாயம்கலெக்டர் அலுவலக வளாகத்தில், தற்போது, பசுமையாக்கும் முயற்சியில் கலெக்டர் மகேஸ்வரி, மரக்கன்றுகளை நட்டு வருகிறார். ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கால்நடைகள் தடையின்றி உலா வருவதுடன், மரக்கன்றுகளையும், நாசமாக்கி வருகின்றன.இதனால், கலெக்டரின் பசுமை திட்டம் தோல்வியடையும் அபாயம் உள்ளது. எனவே, கலெக்டர் அலுவலகத்திற்குள், கால்நடைகள் உள்ளே வராத வகையில், தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X