| மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல் Dinamalar
மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:33

கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, அதிகத்துார் கிராமத்தில், கூவம் ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடம்பத்துார் போலீசார், அதித்துார் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது, கூவம் ஆற்றுப் பகுதியில் இருந்து, மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபர், போலீசாரைக் கண்ட தும் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். போலீசார் சென்று சோதனை செய்த போது, மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.இது குறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X