| உத்தரகோசமங்கையில் விவசாயிகள் அச்சம் Dinamalar
உத்தரகோசமங்கையில் விவசாயிகள் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:33

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் வேளாண்மை துணை விரிவாக்க மையம்,விதை சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட நிர்வாக அலுவலம் அமைந்துள்ளது.




இங்குள்ள வேளாண்மைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உத்தரகோசமங்கை ஊராட்சி மூலம் 25 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி உள்ளது. கடந்த 1992ல் கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டியின் அடிப்பாகம் மற்றும் சுற்றியுள்ள கான்கிரீட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் இதனை அகற்றக்கோரிபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பழைய மேல்நிலைத்தொட்டியை அகற்றும் பணியை முழுமையாக செய்யாமல், அரைகுறையாக விட்டுச்சென்றுள்ளனர்.




உத்தரகோசமங்கைக்கு வேலைநாட்களில் வேளாண்மை துணை விரிவாக்க மையத்திற்கு வரும் விவசாயிகள் பொதுமக்கள் அச்சத்துடன் அவ்விடத்தை கடந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த மேல்நிலைத்தொட்டியை முழுமையாக இடித்து அகற்றும் முயற்சியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்யவேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X