| சாலையில் தேங்கும் மழை நீர் Dinamalar
சாலையில் தேங்கும் மழை நீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:37

ஊத்துக்கோட்டை: மழை நீர் செல்ல வழியின்றி அமைக்கப்பட்ட தார் சாலையில், தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பதால், பொதுமக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை சார்பில், திருவள்ளூரில் இருந்து, ஊத்துக்கோட்டை வரை, தார் சாலை அமைக்கப்பட்டது. இதில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், சத்தியவேடு சாலையில் மழைநீர் செல்ல வழியின்றி, சாலை அமைக்கப்பட்டது.இதனால், மழை பெய்தால், சாலை ஓரம் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இரண்டு தினங்களாக, ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி விடுகிறது. வழக்கம் போல், ஊத் துக்கோட்டை, சத்தியவேடு சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.இதனால், அப்பகுதி மக்கள், கடைகள், வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இனி, மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், மழைபெய்யும் நேரங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே, திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சத்தியவேடு சாலையில், மழைநீர் செல்ல கால்வாய் அமைக்குமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X