பொன்னேரி: வெந்நீர் கொட்டி தீக்காயம் அடைந்த இரண்டு குழந்தைகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தன.பொன்னேரி அடுத்த, காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர், மனோகர் மனைவி அனிதா, 27. சத்துணவு அமைப்பாளர். இவருக்கு, ஸ்ரீதர்ஷித், 4, ஜோஷித், 2, இரண்டு குழந்தைகள் இருந்தனர். கடந்த, 10ம் தேதி, அனிதா, அடுப்பில் இருந்த வெந்நீர் இறக்கும்போது, பாத்திரம் நழுவி விழுந்தது.அதில் இருந்த வெந்நீர், துாங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பட்டு, இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், அடுத்தடுத்து 2 குழந்தைகளும் நேற்று இறந்தன. காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.