| டாஸ்மாக் கடை உடைத்து மதுபாட்டில் திருட்டு  Dinamalar
டாஸ்மாக் கடை உடைத்து மதுபாட்டில் திருட்டு 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:38

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டிலை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.




முதுகுளத்துார்-கமுதி செல்லும் சாலை எட்டிச்சேரி கிராமத்தின் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர். காலையில் ரோட்டில் செல்லும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைந்து கதவு திறந்து கிடைப்பதை பார்த்து போலீசார்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.போலீசார் மற்றும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் வந்து பார்த்த போது கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 100க்கும் மேற்பட்ட பிராந்தி,பீர் பாட்டில்கள் திருடி சென்றுள்ளனர்.




சம்பவ இடத்திற்கு முதுகுளத்துார் டி.எஸ்.பி,ராஜேஸ் நேரில் ஆய்வு செய்தார். பேரையூர் போலீசில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மாடசாமி கொடுத்த புகாரில் எஸ்.ஐ, ஜெகதீஸ்வரன் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.-------

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X