| கணவர் தற்கொலை மனைவி தற்கொலை முயற்சி Dinamalar
கணவர் தற்கொலை மனைவி தற்கொலை முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:38

மணவாள நகர்: மணவாள நகர் அருகே, கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், மனைவி துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.மணவாள நகர் அடுத்த, வெங்கத்துார் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சத்தீஸ்ராஜ், 26. இவரது மனைவி ரோஜா, 23. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, 15ம் தேதி, சத்தீஸ்ராஜ், திருவள்ளூர் - ஏகாட்டூர் இடையே மின்சார ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.இதனால், மிகவும் அதிர்ச்சி அடைந்த மனைவி ரோஜா, நேற்று முன்தினம், வீட்டில், மின் விசிறியில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரது சத்தத்தைக் கேட்டு உறவினர்கள் இவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X