சென்னையில் கட்டுகிறது நெடுஞ்சாலைத் துறை 15 இடங்களில் பாலம்! திட்ட அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம், உள்ளாட்சி தேர்தலில் மக்களை கவர புது வியூகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 ஆக
2019
00:28
பதிவு செய்த நாள்
ஆக 18,2019 23:43

சென்னையில், 15 இடங்களில், புதிதாக மேம்பாலம் கட்ட, திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளை, நெடுஞ்சாலைத் துறைஅதிகாரிகள் துரிதப்படுத்தி உள்ளனர்.


உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், இதில் சில பணிகளை, முதல்வர்,இ.பி.எஸ்., கையால் துவக்கவும், வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.சென்னையில், 200 கி.மீ., சாலைகள், மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.


இங்கு, நாளுக்குநாள் வாகனங்களின், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால், சென்னையின் முக்கிய சந்திப்புகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'பீக் ஹவர்' நேரங்களில், இந்த சந்திப்புகளை கடந்து செல்ல, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர கால வாகனங்களும், இந்த நெரிசலில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி திணறுகின்றன.


அலுவலகங்கள், கல்லுாரிகள், பள்ளிகளுக்கு செல்வோர், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை நகரின் பல்வேறு இடங்களில், மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.


இதைத்தொடர்ந்து, மேலும், 15 முக்கிய சாலை சந்திப்புகளில், மேம்பாலம் கட்ட, அரசு முடிவெடுத்துள்ளது.மேம்பாலம் கட்ட உள்ள முக்கிய சாலை சந்திப்புகள்: கிழக்கு கடற்கரை சாலை - திருவான்மியூர் லேட்டிஸ் பாலச்சாலை சந்திப்பு மடிப்பாக்கத்தில், மவுன்ட் - மேடவாக்கம் சாலை - தெற்கு உள்வட்டச்சாலை சந்திப்பு பூந்தமல்லி நெடுஞ்சாலையில், இரண்டாம் கட்டமாக, நெல்சன் மாணிக்கம் சாலை - அண்ணாநகர், 3வது நிழற்சாலை சந்திப்பு பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில், மவுன்ட் - பூந்தமல்லி - ஆவடி சாலை, பூந்த மல்லி - குன்றத்துார் சாலை, சென்னை - சித்துார் - பெங்களூரு சாலை சந்திப்புகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ராஜாமுத்தையா சாலை முதல் புல்லா நிழற்சாலை சந்திப்பு கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூர் - அக்கரை வரை ஆறு வழிச்சாலை மற்றும் மேம்பாலம் அமைத்தல் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை - வானகரம் - அம்பத்துார் சாலை சந்திப்பு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை - மவுன்ட் - பூந்தமல்லி - ஆவடி சாலை சந்திப்பு மாதவரம் - செங்குன்றம் சாலை - உள்வட்டச்சாலை சந்திப்பு மவுன்ட் - பூந்தமல்லி - ஆவடி சாலையில் மியாட் மருத்துவமனை முதல் முகலிவாக்கம் வரை பல்வழிச்சாலை மேம்பாலம் மறைமலையடிகள் பாலம் - இரும்புலியூர் சாலையில், மாடம்பாக்கம் சாலை சந்திப்பு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கொரட்டூர் சந்திப்பு பல்லாவரம் - குன்றத்துார் சாலை - கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதுார் சாலை சந்திப்பு வடபழனி மேம்பாலம் விரிவாக்கம், அசோக் பில்லர் சந்திப்பு மடிப்பாக்கம் கைவேலி அருகே, மறைமலை அடிகள் பாலம் - இரும்புலியூர் சாலை சந்திப்புஇந்த பகுதிகளில், புதிதாக, 15 மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள், நெடுஞ்சாலைத் துறையில், தீவிரமாக நடந்து வருகின்றன.


உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, அரசிற்கு, மக்களிடம் நற்பெயர் பெற்று தரும் வகையில், இதில் சில பணிகளுக்கு முதல்வர், இ.பி.எஸ்., கையால் அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஓராண்டிற்குள் புதிய மேம்பாலங்கள்இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையின், பெருநகரம் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, ஜி.எஸ்.டி., சாலையில், பல்லாவரம், வேளச்சேரி விஜயநகரம், கோயம்பேடு, காளியம்மன் கோவில் சாலை, மேடவாக்கம், கீழ்கட்டளை, கொளத்துார் ரெட்டேரி ஆகிய சந்திப்புகளில், மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில், மேம்பாலம் கட்டுவதற்கு, நிலம் எடுப்பு பணிகள் துவங்கியுள்ளன. இந்த பணிகளுக்கு, நெடுஞ்சாலைத் துறைக்கு, 593 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது.


மேம்பாலங்களை, ஓராண்டிற்குள் அடுத்தடுத்து போக்குவரத்துக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 மேம்பாலங்களுக்கான கட்டுமான செலவு குறித்த விபரம், திட்ட அறிக்கை தயாரிப்புக்கு பிறகே தெரிய வரும்.தி.மு.க.,வை மிஞ்சமுதல்வர் திட்டம்!சென்னையில், தி.மு.க., ஆட்சியில், கிண்டி, கோயம்பேடு, பாடி உள்ளிட்ட சந்திப்புகளில், மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட வியாசர்பாடி, போரூர் மேம்பாலங்கள், தற்போதைய,அ.தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டன.அ.தி.மு.க., ஆட்சியில், சென்னையில் பெரிய அளவில் மேம்பாலங்கள் கட்டப்படவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.


சட்டசபையில், இதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேசுவது தொடர்கிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வர், இ.பி.எஸ்., விரும்புகிறார்.இதற்காகவே, சென்னையில் ஆறு இடங்களில், மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக, 15 இடங்களில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Sekaran - Hyderabad,இந்தியா
21-ஆக-201911:01:20 IST Report Abuse
Raja Sekaran முதல்ல வடசென்னைல இருக்குற எலிபாண்ட் கேட் மேம்பாலம் சரி பண்ணுங்க மூணு வருஷம் அப்படியே இருக்கு. பேசின் மேம்பாலம் கிராஸ் பண்ண 20 நிமிஷம் ஆகுது. முதல்ல அதை சரி பண்ணுங்க. அப்புறமா புதுசா மேம்பாலம் கட்டி மக்கள் கிட்ட நல்ல பேர் வாங்குங்க
Rate this:
Cancel
Sivaligam - Chennai,இந்தியா
19-ஆக-201915:31:52 IST Report Abuse
Sivaligam First ask them to finish all the pending bridges across Chennai. Later they can spend(loot) money for new constructions. Avoids plans to construct high rise bridges, where metro train is planned (especially in sholinganalur OMR road). To avoid congestion and over population in chennai - need to attack root cause, expand new employment opporutunities in other Tier-1 & 2 cities. Stop IT companies establishments within Chennai, after all IT companies does not need chennai, it requires only building and network connection. Only manufacturing companies need port for import/export
Rate this:
Cancel
areshbabu - chennai,இந்தியா
19-ஆக-201914:40:57 IST Report Abuse
areshbabu முதலில் இவர்களை வேளச்சேரி பாலத்தை கட்ட சொல்லுங்கள் ...... மூன்று ஆண்டுகள் ஆகியும் ஒன்றும் ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X