'சிட்கோ' நிர்வாகத்தின் மெத்தனத்தால் சுகாதார பிரச்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:46

கிண்டி: கிண்டி, தொழிற்பேட்டை வளாக குப்பையை முறையாக கையாளாததால், சுகாதார பிரச்னை அதிகரித்துள்ளது. சுகாதார பணியையும், 'சிட்கோ' நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் தான், தீர்வு கிடைக்கும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அடையாறு மண்டலம், 170வது வார்டு, கிண்டி பகுதியை உள்ளடக்கியது. வார்டு பரப்பளவில், கிண்டி, தொழிற்பேட்டை வளாகம் எனும், சிட்கோ வளாகம், 40 சதவீதம் உள்ளது.இங்கு, 14.4 கி.மீ., நீள சாலை மற்றும் 23.7 கி.மீ., நீள வடிகால் உள்ளது. சாலை, வடிகால் சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை, 'சிட்கோ' நிர்வாகம் செய்கிறது.உரிமம் வழங்குவது, சுகாதாரம் ஆகிய பணிகளை, மாநகராட்சி செய்கிறது. 404 ஏக்கர் பரப்பளவு கொண்ட, சிட்கோ வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், அரசு துறை அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.இங்கு, மக்கும் குப்பை, வெறும், 20 சதவீதம் தான் சேகரமாகிறது. மீதியுள்ள, 80 சதவீதம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்கா குப்பையாகும். குப்பை சேகரிக்கும் பணியில், 'பென்ஸ்' என்ற நிறுவனம் செயல்படுகிறது. ஆனால், குப்பையை முறையாக கையாளவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.பெரும்பாலான சந்திப்புகளில், குப்பை தொட்டி வைக்கவில்லை. வாரத்திற்கு, இரண்டு நாட்கள் தான், குப்பை அள்ளுகின்றனர்.இதனால், பெரும்பாலான தெருக்களில், மக்கா குப்பை அதிகமாக குவிகிறது. பிளாஸ்டிக், தெர்மாகோல் உள்ளிட்ட குப்பையில், மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.மேலும், மழைநீர் வடிகால்களில், கழிவுநீர் தேங்கி உள்ளதால், சுகாதார பிரச்னையால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.மாநகராட்சி எல்லையில், குப்பை மற்றும் சுகாதார பணியை, ஒரே நிர்வாகம் செய்கிறது. அதாவது, இரு பணிகளையும் மாநகராட்சியே கையாள்கிறது.இங்கு, குப்பையை சிட்கோ நிர்வாகமும்; சுகாதாரப் பணியை மாநகராட்சியும் கையாளுவதால், நாளுக்கு நாள் பிரச்னை அதிகரிக்கிறது.இதனால், சிட்கோ வளாகத்தில், கொசு உற்பத்தி மற்றும் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க, சுகாதார பணியை, சிட்கோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.மாநகராட்சி எல்லையில், குப்பை, கழிவுநீர் தேங்கினால், சம்பந்தப்பட்ட துறையிடம் பேசி, சரி செய்து விடுவோம். 'பென்ஸ்' நிறுவனத்திடம் கூறினால், எங்கள் பேச்சை மதிப்பதில்லை; சிட்கோ நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் அலட்சியத்தால், 'டெங்கு' உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவினால், மாநகராட்சி பொறுப்பு ஏற்க வேண்டி உள்ளது. சிட்கோ நிர்வாகம் நழுவி விடுகிறது. குப்பை அகற்றுவது போல், சுகாதார பணியையும், சிட்கோ நிர்வாகம் செய்தால் தான், சுகாதார பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். மழைக்காலம் துவங்குவதால், குப்பையால் கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாநகராட்சி உயர் அதிகாரிகள் தலையிட்டு, சுகாதார பணியை, சிட்கோவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X