பாரபட்சமாக செயல்படும் போக்குவரத்து போலீசார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:53

சென்னை: 'ஹெல்மெட்' அணியாமல் செல்லும் எங்களை பிடிக்கும் போலீசார், 'சீட் பெல்ட்' அணியாமல் செல்லும் கார் ஓட்டுனர்களை பிடிப்பதில்லை என, இரு சக்கர வாகன ஓட்டிகள், குற்றம் சாட்டுகின்றனர்.ஹெல்மெட் அணியாமல் செல்லும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், சீட் பெல்ட் அணியாமல் செல்லும் கார் ஓட்டுனர்களுக்கும், அபராதம் விதிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதம்விதிமீறும் கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வந்தனர்.ஆனால், நாளடைவில், விதிமீறும் கார் ஓட்டுனர்களை பிடிக்காமல், இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே, குறி வைத்து பிடித்து, போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கை, பாரபட்சமாக உள்ளது என, இருசக்கர வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:தினமும், இருசக்கர வாகன ஓட்டிகள், இத்தனை பேரை பிடிக்க வேண்டும் என, உயர் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உத்தரவிடுவர். இலக்குஅவரது உத்தரவுக்கு இணங்க, ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிப்போம்.இலக்கை எட்டிவிட்டால், அன்றைய தினம் கணக்கை முடித்து விடுவோம். கார்களுக்கு, இதுபோன்று எந்த இலக்கையும், அதிகாரிகள் நிர்ணயிக்கவில்லை.இவ்வாறு, போலீசார் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaprakasam Manickam - Chennai,இந்தியா
20-ஆக-201910:44:07 IST Report Abuse
Sivaprakasam Manickam சூப்பர் காவல்துறையினரே இது போலத்தான் சட்டங்களை அமல் படுத்த வேண்டும். சட்டம் சொன்னாலும் கூட உங்கள் மேல் அதிகாரி சொல்வதை மட்டுமே செயல்படுத்தி அவரிடம் நற்பெயர் பெறுவது தான் உங்கள் குறிக்கோள். காலை பத்து மணிக்கு மேல் மாலை ஆறு மணி வரை நடக்கும் தவறுகளுக்கு மட்டுமே காவல்துறை பொறுப்பேற்கும் என்று உங்களுக்கு உங்கள் மேல் அதிகாரி சொல்லியிருப்பார் போலும். ஏனென்றால் மதுரை PC பெருங்காயம் சந்திப்பில் தினந்தோறும் மக்கள் காணும் காட்சி. காலை ஏழு மணி அளவில் பஸ் ஆட்டோ லார்ரி என அணைத்து வாகனங்களும் சாலை விதி மீறிபறப்பதை அனுதினம் ரசிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X