காரைக்குடி : காரைக்குடி அருகே அமராவதிபுதுார் கிராமிய பயிற்சி மையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வங்கி நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் லட்சய்யா வரவேற்றார். காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட 72 கிளைகளை சேர்ந்த மேலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர்.