| மாற்றுத்திறனாளிக்கான மாநில தடகளப் போட்டி Dinamalar
மாற்றுத்திறனாளிக்கான மாநில தடகளப் போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
23:59

காரைக்குடி : காரைக்குடியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப்போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று மதுரை மாவட்டம் முதலிடம் பெற்றது.




காரைக்குடி அழகப்பா பல்கலை விளையாட்டு அரங்கில் 3 நாட்களாக போட்டி நடந்தது. இதில், தமிழக அளவில் 600 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 16 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் ஓட்டம், நீளம், உயரம், மும்முறை தாண்டுதல், குண்டு, வட்டு, ஈட்டி எரிதல் உட்பட 261 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மதுரை மாவட்ட அணி ஒட்டு மொத்தமாக 42 தங்கம் வென்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.




19 தங்கம் வென்று சென்னை 2ம் இடம், 10 தங்கம் வென்று புதுக்கோட்டை 3 ம் இடம் பிடித்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X