கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
00:01

சென்னை: ''பாரம்பரியமிக்க கார்கள், கட்டடங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் உள்ளது,'' என, பழங்கால கார்கள் கண்காட்சியை துவக்கி வைத்து, நடிகை ரேவதி பேசினார்.பழங்கால வாகனங்களை பாதுகாக்க, 'மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்' என்ற அமைப்பு, 18 ஆண்டுகளாக செயல்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும், கார் கண்காட்சி நடத்தி வருகிறது.நடிகை'சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ' என்ற தலைப்பில் நடந்த, பாரம்பரிய கார் கண்காட்சி, சென்னை, திருவான்மியூரில், நேற்று நடந்தது.கண்காட்சியை, நடிகை ரேவதி துவக்கி வைத்தார். 1904 முதல், 1980 வரை, புழக்கத்தில் இருந்த, 130 கார்கள், 45 இருசக்கர வாகனங்கள், கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.எம்.ஜி.ஆர்., ஏ.வி.மெய்யப்பன், எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பயன்படுத்திய கார்கள், கண்காட்சியில் இடம் பெற்றன. மேலும், நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்டோர், திரைப்படங்களில் பயன்படுத்திய கார்களும் வைக்கப்பட்டிருந்தன.கர்நாடகா வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப்பின், ஆறு கார்கள், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. சிறப்பாக பராமரித்த கார்களை தேர்வு செய்து, பரிசு வழங்கப்பட்டது.200 உறுப்பினர்கள்ராஜேஷ் சோமசுந்தரம் என்பவரின், 1941ல் வெளிவந்த, பென்ஸ் கார், முதல் பரிசு பெற்றது. துரைமோகன், நர்ஜின்மஸ்வி மற்றும் ரஞ்சித்பிரதாப் ஆகியோரின் கார்கள், அடுத்தடுத்த பரிசுகளை வென்றன.கண்காட்சியில், நடிகை ரேவதி பேசுகையில், ''பாரம்பரியமிக்க கார்கள், கட்டடங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் உள்ளது. எந்த ஒரு பொருளையும், பழமை மாறாமல் பாதுகாப்பதில், மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும்,'' என்றார்.'மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்' தலைவர், பாலாஜி வாசுதேவன் கூறுகையில், ''ஆரம்பத்தில், 30 கார்களுடன் கண்காட்சியை துவக்கினோம். தற்போது, 200 உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில், கார், பைக் என, 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் இடம் பெறும்,'' என்றார்.நிகழ்ச்சியில், ஏ.வி.எம்., சரவணன், 'செலரிஸ் டெக்னாலஜிஸ்' நிறுவன தலைவர், சுமந்திரன், ராஜா முகர்ஜி, பார்த்தா பானிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கண்காட்சியில், பியுசியட், போர்டு, ஜாகுவார், ரோல்ஸ் ராயஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இடம் பெற்றன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X