சென்னையில் ஈரானிய கொள்ளையர், மக்கள் உஷாராக இருக்க எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
00:06

சென்னை: 'போலீஸ் போல நடித்து, நகை, பணம் பறிக்கும், ஈரானிய கொள்ளையர், சென்னையில் ஊடுருவி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளதால், பொதுமக்கள், உஷாராக இருக்க வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இடம் பெயர்வுஈரான் நாட்டைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், 30 ஆண்டுகளுக்கு முன், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர். பின், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில், திருப்பத்துார், மணப்பாறை உள்ளிட்ட இடங்களுக்கும், இடம் பெயர்ந்தனர்.இவர்களுக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகள் தெரியும். சென்னை, டில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களை தேர்வு செய்து, அந்த இடங்களுக்கு, கார் மற்றும் விமானத்தில் செல்வர்.அதிகபட்சம், 15 நாட்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவர். இவர்கள், கோவில், வங்கி, நகை கடைகள் அருகே காத்திருப்பர். சீருடையில், போலீஸ் போல நடித்து, பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து, நகை, பணம் பறிப்பதே, இவர்களுக்கு வாடிக்கை.கடந்த, 2018 ஜூன், 19ல், காலை, 6:00 மணியில் இருந்து, 11:00 மணி வரை, ராயப்பேட்டையில், செவிலியர், கவிதாவிடம், 9 சவரன், புளியந்தோப்பு, சுந்தர காண்டம் என்ற மூதாட்டியிடம், 13 சவரன் நகையை பறித்தனர்.அதேபோல, அண்ணா நகரில், ஜெயா, புழலில், சுதர்சனம்மாள், மாதவரத்தில், குமாரி என்ற மூதாட்டிகளிடம், 22 சவரன் செயினை பறித்து தப்பினர்.100க்கு தகவல்இது குறித்து, அப்போது, சென்னை, வடக்கு மண்டல இணை கமிஷனராக இருந்த, பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், போலீசார் விசாரித்து, ஆந்திரா வழியாக காரில் தப்பிய ஈரானிய கொள்ளையர், 18 பேரை கைது செய்தனர்.தற்போது, ஈரானிய கொள்ளையர், சென்னையில் ஊடுருவி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதனால், 'பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரி கள் கூறிய தாவது:கலரவம் நடக்கிறது; இந்த வழியாக செல்ல வேண்டாம் என, யாராவது கூறினால், நம்ப வேண்டாம். போலீஸ் எனக்கூறி, நகை, பணத்தை மடித்து தருகிறேன் என, கூறுபவர்களிடம், உஷாராக இருக்க வேண்டும்.இவர்கள் பற்றி, அவசர போலீஸ் எண், 100க்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X