| உடுமலை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் திடீர் போராட்டம்! Dinamalar
உடுமலை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் திடீர் போராட்டம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
00:15

உடுமலை:உடுமலை, அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், மருத்துவ பணிகள் பாதித்தன. ஐந்து மணி நேரம் வெளி நோயாளிகள் சிகிச்சை பாதித்தன.உடுமலை, அரசு மருத்துவமனைக்கு, சுற்றுப்புற பகுதியிலிருந்து தினமும், 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர்.


உள்நோயாளிகளாக, 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனையில், குழந்தைகள் மகப்பேறு பிரிவில், நேற்றுமுன்தினம், மாலை, நர்ஸ் ஆரிபா பானு உள்ளிட்ட ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது, யு.எஸ்.எஸ்., காலனியைச்சேர்ந்த, பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. அவரை பார்க்க வந்த அவரது சகோதரர், வினோத்குமார், 22, உள்ளே செல்ல முயன்றுள்ளார்.மகப்பேறு மருத்து பிரிவுக்குள் ஆண்கள் வரக்கூடாது, என நர்ஸ் தெரிவித்துள்ளார். இதில், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நர்ஸ் மற்றும் அவரை தடுக்க வந்தவர்களை, வினோத்குமார் தாக்கியுள்ளார்.


இது குறித்து, உடனடியாக உடுமலை போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், போலீசார் கண்டு கொள்ளாததால் அதிருப்தியடைந்த, டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை, பணிக்கு செல்லாமல், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.செவிலியர் சங்கத்தின், மாநில செயற்குழு உறுப்பினர் சுதா தலைமையில், சங்கத்தின் மாநில பொருளாளர் கீதா மற்றும் துணைத்தலைவர் தாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


டாக்டர்கள், நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பணி பாதுகாப்பு வேண்டுமென, மருத்துவமனை முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காலை, 7:00 மணிக்கு, புற நோயாளிகள் சிகிச்சை துவங்க வேண்டிய நிலையில், போராட்டம் காரணமாக, புற நோயாளிகளாக சிகிச்சை பெற வந்தவர்கள் பல மணி நேரம் பாதித்தனர். அவசர சிகிச்சைப்பிரிவைத் தவிர, மற்ற பிரிவுகளான, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்கவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும், இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையிலான போலீசார், பேச்சு நடத்தினர்.ஊழியரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.


காலை, 7:00 மணிக்கு துவங்கிய போராட்டம், பகல், 12:00 மணி வரை நீடித்தது. இதனால், புற நோயாளிகள் பிரிவு சிகிச்சைக்கு வந்தவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் முருகன் கொடுத்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், உடுமலை யு.எஸ்.எஸ்., காலனியைச்சேர்ந்த வினோத்குமார்,22, மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பாதுகாப்பு வேண்டும்தற்கொலை, அடிதடி, விபத்து என போலீஸ் வழக்கு சம்பந்தமான நோயாளிகள் அதிகளவு வருகின்றனர். தாலுகா மருத்துவமனையாக உள்ள நிலையில், நிரந்தரமான அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். நிரந்தரமாக அவுட் போலீஸ் ஸ்டேஷன் இருந்திருந்தால், நேற்றுமுன்தினம் மாலை நடந்த ஊழியர் தாக்குதல் சம்பவம் உடனடியாக முடிவுக்கு வந்திருக்கும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X