நடுவுல கொஞ்சம் இருக்கையை காணோம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
00:44

விருதுநகர் : இடநெருக்கடி, சேதமடைந்த இருக்கைகள், பார்க்குமிடமெல்லாம் குப்பை என விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அடிப்படை வசதிகளின்றி கிடக்கிறது என பயணிகள் புலம்புகின்றனர்.




விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருக்கைகள் அதிகளவில் இருந்தும் பொதுமக்கள் உட்கார முடியாத நிலை உள்ளது. காரணம் அனைத்து இருக்கைகளையும் சேதமடைந்து காணப்படுகிறது. விருதுநகரில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் வசதி கிடையாது. ஆதலால் போக்குவரத்திற்கு பொதுமக்கள் பழைய பஸ் ஸ்டாண்டையே நம்பி இருக்கின்றனர்.



இங்கு குப்பையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக்காலம் வேறு துவங்கியுள்ளதால் குப்பையை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் முறையாக அகற்றுவதில்லை. இரவு நேரங்களில் குடிமகன்கள் தொல்லையும் அதிகமாக இருப்பதால் வேலை சென்று வீடு திரும்பும் பணிப்பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட் வெளிப்புறம் மினி பஸ்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது.



அதற்கு காரணம் பஸ்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததே. இதனால் ரோட்டில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. பொதுக்கழிப்பிடமும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. வாட்டர் பிளாண்டும் முறையாக செயல்படுவதில்லை. ஆகவே நகராட்சி நிர்வாகம் பழைய பஸ் ஸ்டாண்டை சீரமைத்து, அதன் வசதிகளை மேம்

படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத்துறையும் விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் இயங்க வழிவகை செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X