துள்ளுது மீன்; துவளுது விலை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
துள்ளுது மீன்; துவளுது விலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
00:50

திருப்பூர்:கேரள மீன் வரத்து துவங்கியுள்ளதையடுத்து, திருப்பூரில் மீன் விலை குறையத் துவங்கியுள்ளது.திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு, தமிழகம், கேரளா கடலோர மாவட்டங்களிலிருந்து, அனைத்துவகை கடல் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. நாளொன்றுக்கு 10 முதல் 15 டன், சனி, ஞாயிறு தினங்களில் மட்டும், தினம் 30 முதல் 40 டன் மீன் வருகிறது.மீன் பிடி தடை அமலில் இருந்ததால், கேரளாவிலிருந்து திருப்பூருக்கு மீன் வரத்து குறைந்தது. அதனால், அனைத்து மீன்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. தடை நீங்கியதையடுத்து, கடந்த சில நாட்களாக, திருப்பூர் மார்க்கெட்டுக்கு, மீண்டும் கேரள மீன்வரத்து துவங்கியுள்ளது.வரத்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதால், மீன் விலையும் சீராகியுள்ளது. கிலோ 200 ரூபாயாக இருந்த மத்தி, தற்போது, 120 ரூபாய்; 240 ரூபாயாக இருந்த அயிலை, 200 ரூபாய்; 300 ரூபாயாக இருந்தசங்கரா, 280 ரூபாய்; 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சிரம் 700 ரூபாயாக அனைத்து மீன்கள் விலையும் குறைந்துள்ளது.மீன் வியாபாரிகள் கூறுகையில், 'கேரளாவில், எர்ணாகுளம், கொல்லம், கோழிக்கோடு பகுதிகளிலிருந்து, திருப்பூர் மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. மீன்பிடி தடையால், கேரள மீன் வரத்து குறைந்து, விலையும் அதிகரித்துவிட்டது.தற்போது, கேரளாவிலிருந்து வழக்கமான மீன் வரத்து துவங்கியுள்ளது. நாளொன்றுக்கு, 10 டன் வரை கேரள மீன் வரத்து துவங்கியுள்ளது. வரத்து சீராகியுள்ளதால், மீன் விலையும் குறைந்துள்ளது' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X