திருப்பூர் மாநகராட்சியில், துப்புரவு பணியாளர்கள் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தலை காட்டுகின்றனர். சிட்கோ, கொங்குமெயின்ரோடு,பிச்சம்பாளையம் பிரிவு பகுதிகளில், கழிவுகள் வெளியே செல்ல வழியில்லாமல் நிரம்பி, ரோட்டில் தேங்கியுள்ளது. மழையின்போது, தண்ணீருடன் சாக்கடை கழிவுகளும் கலந்து, வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
- எம்.கண்ணன், கொங்கு மெயின்ரோடு.வாகனம் தாறுமாறுஈஸ்வரன்கோவில் ஒட்டிய நொய்யல் பாலம் அருகே, சாலை சந்திப்பில், தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதால், விபத்து ஏற்படுகிறது. வேகத்தடை அமைக்க வேண்டும்.- ஆர்.கணபதி, கே.பி.என்., காலனி.'லொள்..லொள்' தொல்லைநெசவாளர் காலனியில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லையால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கின்றனர்.- ஆர்.மனோகர், நெசவாளர்காலனி.வானமே கூரை?அருள்புரம் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லாத காரணத்தால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பாதிக்கின்றனர். அங்கு, நிழற்கூரை அமைக்க வேண்டும்.- கே.மணிகண்டன், அருள்புரம்.சுகாதாரம் சுத்தமா இல்ல...காலேஜ் ரோட்டில், சுகாதாரமின்றி இறைச்சிக் கடைகள் செயல்படுவதால், வாடிக்கையாளர்கள் பாதிக்கின்றனர்.- எஸ்.கமலேஸ், காலேஜ்ரோடு.