| கிளப்பில் நள்ளிரவு சீட்டாட்டம்: 40 பேர் கைது Dinamalar
கிளப்பில் நள்ளிரவு சீட்டாட்டம்: 40 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
00:52

திருப்பூர்:திருப்பூர் மாநகரில் சட்ட விரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த, 40 பேரை கைது செய்து, 30 டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காலேஜ் ரோடு அணைப்பாளையத்தில் கிளப் ஒன்றில் பணம் வைத்து சீட்டாட்டம் நடந்து வருவதாக கமிஷனருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் சென்றது.மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், சந்திரமோகன் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு ஆய்வு செய்தனர். கிளப்பை போலீசார் சுற்றி வளைத்ததை தெரிந்து, சீட்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். கிளப் உரிமையாளர் சோமு, 40, மருதாசலம், 38 உள்ளிட்ட, 40 பேரை போலீசார் பிடித்தனர்.இதுதொடர்பாக, வேலம் பாளையம் போலீசார், 40 பேரை கைது செய்து, 30 டூவீலர்கள், ஒரு லட்சத்து, 70 ஆயிரத்து, 550 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X