பாதாள சாக்கடைக்கு தேவை ரூ.910 கோடி! நிதி பற்றாக்குறையால் புதிய வார்டுகள் தவிப்பு... எட்டாண்டு துயரத்தை துடைக்குமா மாநகராட்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
01:15

மதுரை : மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகள் இருந்த நிலையில், 24.10.2011ல் வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. அதன் பரப்பும் 51.82 ச.கி.மீ.,ல் இருந்து 147.39 ச.கி.மீ., ஆக அதிகரித்தது.



மாநகராட்சியுடன் இணைந்ததால் சகல வசதியும் கிடைக்கும் என விரிவாக்க பகுதியினர் எதிர்பார்த்தனர். ஆனால் எட்டு ஆண்டுகளாகியும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடிப்படை வசதிகளுக்கு அப்பகுதியினர் திண்டாடுகின்றனர். குறிப்பாக பாதாள சாக்கடை வசதியின்றி விரிவாக்கப்பகுதி வார்டுகள் பின்தங்கியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. பின் 1983ல் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.



அதையடுத்து நகரில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சியுடன் இணைந்து 8 ஆண்டுகளாகியும் இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் பாதாள சாக்கடை வசதி செய்யப்படவில்லை. வைகை

வடபகுதியில் இருந்து அதிக கழிவுநீர் ஆற்றில் கலந்து புனிதத்தை கெடுக்கிறது. குடியிருப்புகளில் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது.



வைகையை பாதுகாக்க வடக்கு பகுதியில் இணைக்கப்பட்ட வார்டுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பாதாள சாக்கடை திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு 529 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. இந்நிதியை மாநில அரசு ஒதுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் மல்லுக்கட்டியும் நிதி கிடைத்தபாடில்லை. தற்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நிதி பெற முயற்சி நடக்கிறது. இதற்காக பிரத்யேக திட்டம் ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் தயாரிக்கிறது. நிதி கிடைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர். பொறியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியது: இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் முதலில் பாதாள சாக்கடை திட்டம் வழங்கப்படவுள்ளது.



ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்ட 529 கோடியை விட கூடுதல் தொகை தேவை. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். இதுவரை 650 கோடி ரூபாய் அளவில் பணிகள் நடக்கின்றன. இன்னும் 350 கோடி ரூபாய் உள்ளது. இதில் 250 கோடி ரூபாயை பாதாள சாக்கடை திட்டத்திற்கு பெற உள்ளோம். எஞ்சிய 100 கோடிக்கு வேறு சில பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். நிதி கிடைக்காதபட்சம் ஆசியன் வளர்ச்சி வங்கியை நாடுவோம் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-201920:50:33 IST Report Abuse
ஆப்பு இதுக்கெல்லாம் நிதி இருக்காது. மக்களுக்கு லஞ்சமா 2000 ரூவா குடுக்க எங்கேருந்தாவது நிதி வந்துரும். ஏன் உலக வங்கி, ஜப்பான் கிட்டேயெல்லாம் கடன் கேக்குறது?
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
19-ஆக-201915:03:50 IST Report Abuse
PANDA PANDI இதனால் மதுரை மக்கள் கூட்டமாக குடிபெயர்ந்து வேற மாவட்டத்திற்கு செல்லும் நிலை உருவாகும். மதுரையின் கலாச்சாரம் ஒரு கேள்விக்குறி.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-201904:40:26 IST Report Abuse
Mani . V ஹலோ, 10000 கோடி ஒதுக்கி இயற்கை வளங்களை அழித்து எட்டு வழிச் சாலை போட எங்களால் நிதி ஒதுக்க முடியும். (அதில் 7000 கோடி சம்பந்திக்கு). ஆனால் பாதாள சாக்கடை திட்டத்துக்கெல்லாம் நிதி ஒதுக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X