| சர்வதேச அளவில் சித்த மருத்துவம் முன்னேறும் Dinamalar
சர்வதேச அளவில் சித்த மருத்துவம் முன்னேறும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
01:16

மதுரை : ''பத்தாண்டுகளில் சித்த மருத்துவத்தின் மகத்துவம் சர்வதேச அளவில் முன்னேறும்,'' என, மதுரை மடீட்சியாவில் நடந்த இந்திய பாரம்பரிய மருத்துவக் கண்காட்சி (ஆயுஷ்) நிறைவு விழாவில் மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் கனகவள்ளி பேசினார்.



மடீட்சியா தலைவர் முருகன் வரவேற்றார். கண்காட்சி துணை தலைவர் டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இயக்குனர் கனகவள்ளி பேசியதாவது: பன்னாட்டு கலாசாரம் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் மன உளைச்சல், மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பழமையும், பாரம்பரியமும், தொன்மையும் மிக்க இந்திய சித்த மருத்துவ முறைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கண்டறிந்தனர். இதன் மூலம் அனைவரும் நலமுடன் நோயின்றி, நோய் வராமல் வாழ வேண்டும். சித்தர்களின் மருத்துவம் நவீன மருத்துவத்துடன் ஒப்பிட முடியாதது.



இந்திய மருத்துவ முறையான ஆயுஷ் 2010 முதல் தனி அமைப்பாக செயல்படுகிறது. மத்திய மருத்துவ குழுமம் சித்த மருத்துவத்தில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார். டாக்டர் பிச்சைகுமார், ஓமியோபதி மருத்துவ கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், டாக்டர்கள் காளிதாஸ், திருநாராயணன், கண்காட்சி நிர்வாகிகள் கண்ணன், பொன்சிங், ராஜாமுருகன் பங்கேற்றனர். மடீட்சியா கவுரவ செயலர் முருகானந்தம் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X