தங்கத்தில் முதலீடு செய்ய
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
01:25

தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கும் சூழலில், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வழிகள் பற்றிய ஓர் அலசல்:முதலீடு நோக்கில் தங்கம் ஈர்ப்புடையதாக இல்லாத நிலை மாறிஇருக்கிறது. அண்மை காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை, 20 சதவீதமும், மூன்று மாதங்களில், 14 சதவீதமும் உயர்ந்துள்ளது.


உள்ளூரில் தங்கம் விலை இதே காலத்தில், 23 மற்றும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக பொருளாதார நிச்சயமற்ற சூழலில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. தற்போது அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர், ஈரான் அரசியல் சிக்கல், சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஆகிய காரணங்களினால் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது.தங்க சேமிப்பு பத்திரம்மேலும், மத்திய வங்கிகளும், தங்கத்தை அதிகமாக வாங்கி கையிருப்பு வைக்கும் போக்கு காணப்படுகிறது. இந்த பின்னணியில், தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள் இருக்கின்றன.காகித வடிவில் தங்கம் வாங்க விரும்புகிறவர்களுக்கு தங்க சேமிப்பு பத்திரம் ஏற்றதாக அமைகிறது. தங்க சேமிப்பு பத்திரம் அரசு சார்பில், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகிறது. ஒரு கிராமில் துவங்கி, 4 கிலோ வரை இதில் முதலீடு செய்யலாம்.இதற்கான முதிர்வு காலம், 8 ஆண்டுகள். எனினும், 5 ஆண்டுகளுக்குப்பின் வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது.தங்க சேமிப்பு பத்திரத்திற்கு முதலீடு காலத்தில், 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. வெளியீட்டின் போது தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. தங்க சேமிப்பு பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டயிலிடப்பட்டு பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. செப்டம்பர், 9 முதல், 13ம் தேதி வரை அடுத்த கட்டமாக பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு சராசரியாக, 26 சதவீத பலன் அளித்திருப்பதாக கருதப்படுகிறது. எனினும், இந்த பத்திரங்களின் பணமாக்கும் தன்மை எளிதானது அல்ல. பங்குச்சந்தையில் இவற்றை வாங்கி விற்கலாம் என்றால், இவற்றின் பரிவர்த்தனை அளவு குறைவாகவே உள்ளது. நீண்ட கால நோக்கில், இவற்றை வாங்கலாம்.இதே போல மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், இ.டி.எப்., வடிவில் தங்கத்தில் முதலீடு செய்ய வழி செய்கின்றன.


இந்த நிதிகள் தங்கத்தில் முதலீடு செய்து, அவற்றை யூனிட்களாக அளிக்கின்றன. பொதுவாக, ஒரு யூனிட் ஒரு கிராம் என, அமைகிறது. முதலீட்டிற்கு ஈடான தங்கம் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு, செபி அமைப்பின் விதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பிடப்படுகின்றன. தங்க இ.டி.எப்., விலை உள்ளூர் தங்கத்திற்கு எதிராக கணக்கிடப்படுகிறது. இந்த வடிவில் முதலீடு செய்ய, டிமெட் கணக்கு வைத்திருப்பது அவசியம்.


நாணயங்கள்


இவைத்தவிர, வழக்கமாக நாடப்படும் நகை அல்லது நாணய வடிவிலும் தங்கம் வாங்கலாம். தங்க நகை எனில் அவற்றுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் ஆகிய அம்சங்கள் உண்டு. தங்கம் தற்போது ஈர்ப்புடையதாக மாறியிருந்தாலும், முதலீடு நோக்கில் தங்கத்தை வாங்கும் போது, அவை நிதி இலக்குகளுக்கு ஏற்றதாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். தங்கம் முதலீடு தொகுப்பிற்கு நிலையான தன்மை அளிக்கும் என்றாலும், ஒட்டுமொத்த முதலீட்டில் தங்கத்தின் அளவு, 10 முதல், 15 சதவீதம் வரை இருப்பது ஏற்றது என கருதப்படுகிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X