| தனிநபர் கடன் தகுதியை Dinamalar
தனிநபர் கடன் தகுதியை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
01:30

'பர்சனல் லோன்' எனப்படும், தனிநபர் கடன், ஈட்டுறுதி இல்லாத கடனாகும். எனவே, மற்ற கடன்களை விட தனிநபர் கடன், எளிதாகவும், விரைவாகவும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் இதற்கான வட்டிவிகிதமும் அதிகம். தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், கடன் பெறுவதற்கான தகுதி இருக்கிறதா என, அறிந்து கொள்வது நல்லது.வேலையும், வருமானமும்! தனிநபர் கடன் தகுதியை தீர்மானிப்பதில், வேலை மற்றும் வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் பணி புரியும் நிறுவனம், அரசு துறை அல்லது மதிப்பு மிக்க தனியார் நிறுவனம் எனில், எளிதாக கடன் கிடைக்கும்.


வேலையின் நிலையான தன்மை முக்கியம். குறைந்தபட்ச மாத வருமானம் என்ற வரம்பும் இருக்கும்.வயது என்ன? கடனுக்கு விண்ணப்பிப்பவரின் வயதும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. பொதுவாக, 23 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதில்லை. வயது குறைவாக அல்லது அதிகமாக இருக்கும் போது, கடனை அடைக்க ஏற்ற நிதி நிலை இருக்காது என, கருதப்படுகிறது.கிரெடிட் ஸ்கோர்: வீட்டுக்கடன் போலவே, தனிநபர் கடனுக்கும் ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் கவனத்தில் கொள்ளப்படுகிறது.


கிரெடிட் ஸ்கோர் என்பது, கடனை திரும்பி அளிக்கும் தன்மையை உணர்த்துவதாக கருதப்படுவதால், அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் எளிதாக கடன் கிடைக்கும். அதிக கிரெடிட் ஸ்கோர், இருந்தால், வட்டி விகிதம் போன்றவற்றில் சாதகமான அம்சங்களையும் கோரலாம்.இருப்பிடம்: தனிநபர் கடன் பெற இந்தியாவில் வசிக்க வேண்டும் என்பதோடு, வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியமும் பெற வேண்டும்.


உதாரணமாக, பெங்களூரில் இருப்பவர் கடன் பெற வேண்டும், எனில், குறைந்த பட்ச வருமானம், 35 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம். ஜெய்ப்பூர் போன்ற நகரங்கள் எனில், இது சற்று குறைவாக அமையலாம்.கால்குலேட்டர்: தனிநபர் கடன் தகுதியை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களை அணுகலாம். கடன் தகுதி விபரங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். கடன் சேவை உள்ளிட்ட நிதி தகவல்களை அளிக்கும் இணையதளங்களில், இதற்கான கால்குலேட்டர் வசதியும் அளிக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X