நிதி சுதந்திரம் பெறுவது மற்றும் நிதி கல்வி தொடர்பாக இந்தியர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.இணைய, 'மியூச்சுவல்பண்ட்' சேவை வழங்கும், 'ஸ்கிரிப் பாக்ஸ்' நிறுவனம் முக்கிய நகரங்களில், நிதி கல்வி தொடர்பான ஆய்வை, 26 முதல், 45 வயது வரை உள்ளவர்களிடம் நடத்தியது.
இந்தியர்களில், 72 சதவீதத்தினர் நிதி சுதந்திரம் பெறதேவையான தொகை அல்லது அதற்கு எப்படி முதலீடு செய்வது என அறியாமல் இருக்கின்றனர் என்பது, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், 76 சதவீதம் பேர், நிதி திட்டமிடல் போன்ற நிதி கல்வி சார்ந்த விஷயங்களில் போதிய விழிப்புணர்வு இல்லை என, ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 56 சதவீதம் பேர், தங்கள் நிதி விஷயங்களை எப்படி சரியாக கையாள்வது என, தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.பாதி பேருக்கு மேல், முதலீடு விஷயங்களில் எங்கிருந்து துவங்குவது எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.பெண்களை பொருத்தவரை, ஐந்தில் ஒருவரே நிதி திட்டமிடல் மற்றும் நிதி சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.