| நல்ல குடிமகனின் பொறுப்புகள் என்ன? கல்விக்கண்காட்சியில் விளக்கம் Dinamalar
நல்ல குடிமகனின் பொறுப்புகள் என்ன? கல்விக்கண்காட்சியில் விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
02:04

பெ.நா.பாளையம்:தனி மனிதனின் செயல்பாடுகள், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவுவதாக அமைய வேண்டும் என, ஜி.கே.டி., மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிருஷ்ணகுமார் பேசினார்.பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நல்ல குடிமகனின் பொறுப்புகள் என்ற தலைப்பில், கல்வி மற்றும் செயல் திட்ட விளக்கக் கண்காட்சி நடந்தது.


இங்கு, ஆண்டுதோறும் சுதந்திரதினத்தை முன்னிட்டு, முக்கிய தலைப்புகளில் மாணவ, மாணவியரின் செயல் திட்ட விளக்கக் கண்காட்சி நடக்கும்.இந்த ஆண்டு நடந்த கண்காட்சியில், 5ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், நுகர்வோர் உரிமைகள், இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவம், அதற்குகீழ்ப் படிந்து நடத்தலின் அவசியம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகள், அதை பாதுகாக்கும் முறைகள், ஒலி மாசுபடுதல், தாவரங்கள், விலங்குகள், பறவைகளை பாதுகாத்தல், வீட்டுக்கும், நாட்டுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளும், பொறுப்புகளும் குறித்த மாதிரிகளை தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தனர்.


நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதல்வர் சித்ரா சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். நிர்வாகச் செயலாளர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் புதிய தாளாளராகப் பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணகுமார், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கண்காட்சியைத் திறந்து வைத்து பேசுகையில், ''நிகழ்காலத்துக்கு ஏற்ற வகையில், தனி மனித செயல்பாடுகள் மாறும்போது, அவை யாவும் தனி மனித வளர்ச்சிக்கும், நம் நாட்டின் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றார். துணை முதல்வர் இந்திரா நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X