| கிளப்புறாங்கய்யா... Dinamalar
கிளப்புறாங்கய்யா...
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
02:06

மேக வெடிப்பால் வெள்ளம்!உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில், மோரி டெக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மேகவெடிப்பு ஏற்பட்டு, அதிக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், உத்தரகாசி வழியே பயணிக்கும் டன்ஸ் ஆற்றில், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரங்களில் இருந்த வீடுகள், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆர்ப்பரித்து செல்லும் ஆற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.அழகிய செல்லப்பிராணிகள்!ஜார்ஜியா நாட்டின், அட்லாண்டா நகரில் உள்ள யுட்ரப் பூங்கா ஒன்றில், 'டாக்கிகான்' என்ற கண்காட்சி நடந்தது. இதில், டால்மேஷியன், லேப்ரடார் ரெட்டீரவர், சைபீரியன் ஹஸ்கி உள்ளிட்ட பல வகை நாய்கள் பங்கேற்றன. இதில், செல்லப்பிராணிகளுக்கு பிரத்யேகமாக உடை தயாரித்து அதன், தலை உடல் பகுதிகளில் அணிவித்து அழைத்து வந்தனர். அழகிய உடைகளில் செல்லப்பிராணிகள் கலக்கலாக வலம் வந்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்!சூடான் நாட்டில் நீண்ட நாட்களாக ஆட்சி செய்த அதிபர் ஓமல் அல் பஷிருக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தியதை அடுத்து, பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு கடந்த ஏப்., மாதம் முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இருப்பினும், ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, எத்தியோப்பியா மற்றும் ஆப்ரிக்கா யூனியன் பிரதிநிதிகள் முன்னிலையில் போராட்ட குழுவினருக்கும், ராணுவத்துக்கும் இடையே பேச்சு நடத்தப்பட்டது. இதன் முடிவில், ஆட்சி அதிகாரத்தை அரசியல் தலைமையுடன் ஒப்படைக்க ராணுவம் ஒப்புக்கொண்டது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் கர்தோமில் உள்ள, சுதந்திர சதுக்கத்தில் திரண்டு மகிழ்ச்சியை கொண்டாடினர்.வைரலாகும் மூன்றெழுத்து வசனம்!இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டார். கடந்த, 1968ம் ஆண்டு வெளியான மூன்றெழுத்து என்ற திரைப்படத்தில், ஜெயலலிதா, அசோகன், நாகேஷ் உள்ளிட்ட அத்தனை நடிகர், நடிகைகளும் மூன்றெழுத்து என்ற சொல்லை வைத்தே, ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வசனம் பேசுவர். இந்த வீடியோவை அவர் வெளியிட்டதும், பெருமளவில் வைரலாகியுள்ளது. இதில், குறும்புக்கார நெட்டிசன்கள் பலர் மூன்றெழுத்திலேயே, 'கமென்ட்'களை பதிவு செய்து வருகின்றனர்.போண்டா, சூடா இல்லை!திருப்பூர் மாவட்டம், தாராபுரம் புறவழிச்சாலையில் டீக்கடை ஒன்று உள்ளது. இந்த டீக்கடைக்கு சென்ற, 50 வயது பெரியவர், கடைக்காரரிடம் போண்டா கேட்டுள்ளார். உடனே அந்த நபர் ஒரு போண்டாவை எடுத்து கொடுத்துள்ளார். உடனே, 'போண்டா சூடாக இல்லை' என்பதால், கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். எனினும், கோபம் குறையாத அவர், அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் கொடுத்தார். போலீசார் டீக்கடைக்காரரை வரவழைத்து விசாரித்தனர். இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி, சிரிப்பு விருந்து படைத்து வருகிறது.பெத்த மனம் 'பித்து'நெல்லை மாவட்டத்தில், திசையன்விளை பகுதியில் அமராவதி என்பவரின் மகள், ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனுடன் மகள் வீட்டை விட்டு வெளியேறினார். மகள் தன் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறியதால், தாய், ஆத்திரமடைந்தார். இதைதொடர்ந்து, மகள் இறந்துவிட்டதாக கூறி, 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர் அடித்து, ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். தற்போது, இந்த சம்பவம் வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X