| வறட்சியால் காய்கறி Dinamalar
வறட்சியால் காய்கறி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
06:19

பேரையூர் : மழையின்றி வறட்சியால் பேரையூர் தாலுகாவில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.




இத்தாலுகாவில் சந்தையூர், சாப்டூர், பாரைபட்டி, அத்திபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் அதிகமான ஏக்கரில் காய்கறி பயிர்கள்சாகுபடி செய்யப்பட்டுஉள்ளன. இந்தாண்டு எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாததால் காய்கறி செடிகள் கருகி விட்டன. நிலத்தடி நீர் மட்டம் இறங்கியதால் கிணறுகள்வறண்டு விட்டன. கிணறுகளில் பல அடி ஆழத்திற்கு 'போர்வெல்' அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை.விவசாயிகள் கூறியதாவது: பயிரிடப்பட்ட தக்காளி, மிளகாய், கத்தரி நாற்றுகளுக்கு பாய்ச்ச கிணறுகளில் தண்ணீர் இல்லை. பயிர்களும் கருகி விட்டன.வேறுவழியின்றி பல விவசாயிகள் பிழைப்புக்காக வெளியூர் செல்கின்றனர் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X