| புகார் பெட்டி Dinamalar
புகார் பெட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
06:34

தேங்கும் கழிவுநீரால் அவதிசிவகாசி ஒன்றியம் ஆலமரத்துபட்டி ஊராட்சி வினோபா காலனியில் வாறுகாலில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரத்னகுமார், ஆலமரத்துபட்டி.உடைந்த குடிநீர் தொட்டிவிருதுநகர் நகராட்சி தர்காஸ் தெருவில் புழக்கத்திற்கான குடிநீர் தொட்டி உடைந்து கிடக்கிறது. நகராட்சி அதிகாரிகளிடம் சீரமைத்து தர கோரி பலமுறை மனு அளித்துள்ளோம். தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கணேசன், முத்தால்நகர். செயல்படாத குடிநீர் தொட்டிஅருப்புக்கோட்டை 7 வது வார்டு முஸ்லீம் பெரிய தெருவில் நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி செயல்பாட்டில் இல்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பக்கத்து தெருக்களுக்கு அலைய வேண்டியுள்ளது. நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜாக்கனி, அருப்புக்கோட்டை ரோடு வசதி இல்லைவிருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சி காந்திநகரில் ரோடு வசதி போதுமான அளவில் இல்லை. இரவில் தெருவிளக்கு வசதியும் இல்லாததால் வாகனங்கள் ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாண்டி, ரோசல்பட்டி. ஊரணியை மீட்டு தாருங்கள்விருதுநகர் தாலுகா பாவாலி ஊராட்சி எல்கைப்பட்டியில் பொதுமக்களுக்கு சொந்தமான ஊரணியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். பழைய வரைபடத்தில் உள்ளபடி அந்த இடத்தை ஊர்மக்கள் பயன்பெறும் வகையில் மீட்டு தர வேண்டும்.செல்வராஜ், எல்லைபபட்டி.பள்ளி முன்பு கழிவுநீர்சாத்துார் முள்ளிச்செவல் அரசுப் பள்ளி முன்பு கழிவுநீர் வாறுகால் இல்லாததால் ரோட்டில் செல்கிறது. தேங்கும் இந்த கழிவுநீரால் துார்நாற்றம், சுகாதாரகேடு ஏற்பட்டு மாணவர்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வித்யா, முள்ளிச்செவல்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X