| தீயில் கருகிய கணவன் மனைவி மீது வழக்கு Dinamalar
தீயில் கருகிய கணவன் மனைவி மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
22:39

பெ.நா.பாளையம்:சின்னதடாகம் அருகே கணவன் மீது கெரசின் ஊற்றி எரித்த மனைவி மீது தடாகம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.சின்னதடாகத்தில் வசித்தவர் முருகேசன், 47; கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர்.


குடித்து விட்டு மனைவி சுமதியுடன், தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் குடித்து விட்டு வரும் முருகேசனை, சுமதி வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்தார். கடந்த, பிப்., 7 ம் தேதி வழக்கம்போல குடித்து விட்டு வந்த முருகேசனை, சுமதி வீட்டுக்குள் விடவில்லை. தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட முருகேசனை, சுமதி கெரசின் ஊற்றி எரிக்க முயன்றார். இதில், முருகேசன் வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம், தீக்காய சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதை தொடர்ந்து, மனைவி சுமதி மீது தடாகம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X