| வாழைத்தார் குடோனை சேதப்படுத்திய யானை Dinamalar
வாழைத்தார் குடோனை சேதப்படுத்திய யானை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
22:43

கூடலுார்:கூடலுார் புளியாம்பாறை பகுதியில் வாழைத்தார் குடோனை, மக்னா யானை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார் புளியாம்பாறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக, இரவில் முகாமிடும், மக்னா யானை குடியிருப்புகளை சேதப்படுத்துவதுடன், உணவுக்காக விவசாய பயிர்களையும் சேதம் செய்கிறது.வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து, விரட்டி வருகின்றனர்.


எனினும், ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. நேற்று முன்தினம், இரவு குடியிருப்பு பகுதிக்கு வந்த யானை, அதிகாலை, 3:00 மணியளவில், 'வாழைத்தார்' வைத்திருந்த குடோன் சுவரை உடைத்து சேதபடுத்தியது. தகவலறிந்த, வனக்காப்பாளர் பிரகாஷ் மற்றும் வன ஊழியர்கள் அங்கு சென்று, பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.இதனால், அச்சமடைந்த மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் அடிக்கடி முகாமிட்டு, விவசாய பயிர்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வரும், மக்னா யானையை, வேறு பகுதிக்கு விரட்டி, பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X