பார்க்கிங் தளத்தில் 'கேம்ப் ஆபீஸ்' பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
22:49

ஊட்டி:ஊட்டி யூனியன் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிர்வாகம் சார்பில் பார்க்கிங் தளம் அகற்றப்பட்டு, கேம்ப் ஆபீசுக்கான கட்டுமான பணி நடப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஊட்டியில், யூனியன் பஞ்சாயத்து அலுவலகத்தின் கீழ், மாவட்டத்தில், 13 பஞ்சாயத்து அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமான அலுவலர்கள் வந்து செல்கின்றனர்.


தவிர, பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி பணிக்கான கட்டுமான பொருட்கள் வெளியிடங்களிலிருந்து கொண்டு வந்து இருப்பு வைத்து, பின் அந்தந்த பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.மேலும், இங்குள்ள அரங்கில் அரசு மற்றும் தனியார் துறை சம்மந்தமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இங்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுக்கு முன்பு, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இன்டர்லாக் கற்கள் மூலம் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டது.ரூ.46 லட்சத்தில் கேம்ப் ஆபீஸ்தற்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிர்வாகம் சார்பில், 46 லட்சம் ரூபாயில் பார்க்கிங் பகுதியை அகற்றி 'கேம்ப் ஆபீஸ்' க்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் கட்டுப்பாட்டில் யூனியன் பஞ்சாயத்து அலுவலகம் உள்ள நிலையில் அத்துறை அனுமதி வழங்கவில்லை.இப்பணிக்காக, 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட இன்டர்லாக் பார்க்கிங் தளம் மற்றும் 15 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டது.


இப்பணிக்காக, 25 லட்சம் ரூபாய் அரசு பணம் விரயமாகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டட பணி நடந்து வருகிறது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு கூறுகையில், ''மாவட்ட ஊரக வளர்ச்சி துறைக்கு கேம்ப் ஆபீஸ் கட்ட ஒதுக்கப்பட்ட, 46 லட்சம் ரூபாய் கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளது. நான் பொறுப்பேற்ற பிறகு இந்த நிதியின் மூலம், கேம்ப் ஆபீஸ்க்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. பார்க்கிங் தளத்திற்கு அதே வளாகத்தில் இடம் ஒதுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X