| புதர் சூழ்ந்த பள்ளி கிணற்றால் அச்சம் Dinamalar
புதர் சூழ்ந்த பள்ளி கிணற்றால் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
22:51

பந்தலுார்:பந்தலுார் அருகே, உப்பட்டி அரசுப்பள்ளிக்கு, குடிநீர் வினியோகம் செய்யும் கிணறு, புதர் சூழ்ந்து மாசடைந்து வருகிறது.உப்பட்டியிலிருந்து-புஞ்சைவயல் செல்லும் சாலையோரத்தில், அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணறு, அருகிலுள்ள சதுப்பு நிலத்தை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றின் மோட்டார் அறைக்கு செல்ல தனியாக, பாதைகள் இல்லாத நிலையில், புதர்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும்.


மேலும், கிணற்றை புதர்கள் சூழ்ந்துள்ள நிலையில், மோட்டார் 'சுவிட்ச்' போட செல்லும் நபர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது. கிணற்றை புதர் சூழ்ந்துள்ளதால், குடிநீரும் மாசடைந்து வருகிறது. தற்போது, மழை பெய்துள்ள நிலையில், மாசடைந்த குடிநீரை பருகினால் பல்வேறு நோய்களும் பரவும் அபாயம் உள்ளது.எனவே, கிணற்றுக்கு செல்ல, தனியாக நடைபாதை அமைக்கவும், கிணறை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X