| புது அட்டுபாயில் கிராமத்தில் மண் சரிந்து வீடுகள் சேதம் Dinamalar
புது அட்டுபாயில் கிராமத்தில் மண் சரிந்து வீடுகள் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
22:59

மஞ்சூர்:மஞ்சூர் அருகே புதுஅட்டுபாயில் கிராமத்தில் மழையால் சேதமான வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட புதுஅட்டுபாயில், கிராமத்தில் மழையால் மண் சரிந்து நான்கு வீடுகள் பலத்த சேதமடைந்தது. குடியிருப்பு வாசிகள் அங்குள்ள மாற்று குடியிருப்பில் தங்கியுள்ளனர்.


குந்தா வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல், எமரால்டு சுற்றுவட்டாரத்தில் வீடிழந்தவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குந்தா தாசில்தார் சரவணன் கூறுகையில், '' கன மழையால் புதுஅட்டுபாயில் கிராமத்தில், நான்கு வீடுகளின் மீது மண் சரிந்து வீடுகள் சேதமான பகுதிகளை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. உரிய நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X