| உலக புகைப்பட தினம் குழந்தைகளுக்கு உதவி Dinamalar
உலக புகைப்பட தினம் குழந்தைகளுக்கு உதவி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
23:00

ஊட்டி:உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, ஊட்டியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.ஊட்டியில், ஸ்டுடியோஸ் புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பட கலைஞர்கள் நல சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சார்லஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:ஊட்டியில் புகைப்படம் மற்றும் ஒளிப்படக் கலைஞர்கள் அதிக அளவில் உள்ளனர்.


சுற்றுலா நகரமான இங்கு இத்தொழிலில் தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. சமீப காலமாக, திருமணம், சீர் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், மொபைல் போன்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இத் தொழிலை நம்பியுள்ள பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


சங்கம் சார்பில் இனிவரும் நாட்களில் முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் இயலாதோருக்கு தேவையான உதவிகள் செய்வது; கூடுமானவரை, மருத்துவ முகாம்கள் நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது என்பன உட்பட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து, ஊட்டி வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வரும் ரோட்டரி ஆசியா சிறப்பு குழந்தைகள், உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, சங்க துணை செயலாளர் விக்கி வரவேற்றார். மக்கள் தொடர்பு நிர்வாகி வினோத் நன்றி கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X