| மழை பாதிப்பு நிவாரண பொருட்கள் வழங்கல் Dinamalar
மழை பாதிப்பு நிவாரண பொருட்கள் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
23:01

குன்னுார்:கூடலுார் பகுதியில், மழையால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரி சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.இதில், புத்துார் வயல் மற்றும் தேன் வயல், கிராமங்களில் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா பேசுகையில், ''மழை வேண்டும் என எதிர்நோக்கி இருந்த நிலையில், அதிக மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போர்வைகள், கம்பளிகள் உட்பட பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், என்.சி.சி., மாணவியர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X