| தெருவிளக்கு எரிவதில்லை: வேதனையில் பொதுமக்கள் Dinamalar
தெருவிளக்கு எரிவதில்லை: வேதனையில் பொதுமக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
23:22

வால்பாறை:வால்பாறை நகரில், பல இடங்களில் தெருவிளக்கு எரியாததால், மக்கள் குமுறலில் உள்ளனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் போடப்பட்டுள்ளன. இது தவிர, வால்பாறை நகர், ரொட்டிக்கடை,சோலையார்நகர் உள்ளிட்ட பகுதியில், உயர்மின் மின் கோபுர விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது.


சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படும் வால்பாறை நகரில், இரவு நேரத்தில் எரியாத தெருவிளக்குகளால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். வால்பாறை கோ-ஆப்ரேட்டிவ் காலனியில், தெருவிளக்குகள், கடந்த சில நாட்களாக எரிவ தில்லை அதேபோல் வெள்ளமலை, அக்காமலை, சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரிவதில்லை.வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடும் இப்பகுதிகளில், தெருவிளக்குகள் எரியாததால், மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மழையின் காரணமாக, சில இடங்களில், இதுபோன்ற பிரச்னை உள்ளது. ஓரு வாரத்தில், தெருவிளக்குகள் அனைத்தும் பழுதுபார்க்கப்படுமல்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X