தண்ணீர் ததும்பும் சோலையாறு அணை: பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
23:23

வால்பாறை:வால்பாறையில் பெய்த மழையால், சோலையாறு அணை தொடர்ந்து எட்டாவது நாளாக தண்ணீர் நிரம்பி ததும்புகிறது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் ஆண்டு தோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், கிடைக்கும் தண்ணீரை சேமித்து, பாசனத்துக்கு வழங்க பி.ஏ.பி., திட்டத்தில் அணைகள் கட்டப்பட்டன.


மேல்நீராறு, கீழ்நீராறு ஆகிய இருஅணைகளின் தேக்கி வைக்கப்படும் மழை நீர், சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. சோலையாறு அணை நிரம்பியதும், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.பரம்பிக்குளம் அணையில் இருக்கும் தண்ணீர் துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைக்கு கொண்டு வரப்பட்டு, காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணையில் சேர்த்து, பாசனத்துக்கு வழங்கப்படுகிறது.இதே போல், காடம்பாறை அணை நிரம்பியதும் மேல்ஆழியாறு அணை வழியாக, ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழைக்கு சோலையாறு அணை கடந்த, 11ம் தேதி நிரம்பியது. சோலையாறு அணையில் சேடல்டேம் மதகுகள் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு குறைந்து, வெயில் நிலவும் நிலையிலும், மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 1,037 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து, 213 கனஅடி தண்ணீரும், சோலையாறு அணைக்கு திறந்துவிடப்படுகிறது.


இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.53 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,220 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 2,362 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 47.70 அடியாக இருந்தது.சோலையாறு அணை தொடர்ந்து எட்டாவது நாளாக நிரம்பிய நிலையில், ததும்புவதால்பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X