போரூர் ஏரி உபரி நீர் கால்வாய் கட்டும் பணிக்கு... நிதி கிடைக்குமா? தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 'கிரீன் சிக்னல்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 ஆக
2019
06:55
பதிவு செய்த நாள்
ஆக 19,2019 23:27

சென்னை : போரூர் ஏரியின், உபரி நீர் செல்லும் கால்வாய் கட்டும் பணி, அரசு நிதி ஒதுக்காததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தடையில்லா சான்று கிடைத்தும், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழைக்கு, 15க்கும் மேற்பட்ட கிராமங்கள், வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



சென்னை, போரூர் ஏரியின் உபரி நீர், அடையாறு ஆறு வழியாக, கடலில் கலக்க வேண்டும். போரூர் ஏரிக்கு, ஐந்து மதகுகள், ஒரு கலங்கல் இருந்தன. உபரி நீர், கலங்கல் வழியாக வெளியேறும். இந்த கலங்கல், மதனந்தபுரத்தில் இருந்தது. அடையாறு ஆறு சென்னை புறவழிச்சாலை அமைப்பதற்கு முன், போரூர் ஏரி உபரிநீர், மதனந்தபுரம் கலங்கலில் இருந்து, 150 அடி துாரத்திற்கு, பட்டா நிலத்தில் பாய்ந்து, மவுலிவாக்கம் கால்வாய் வழியாக, ராமாபுரம் கால்வாயை அடைந்து, எம்.ஜி.ஆர்., இல்லத்திற்கு அருகே செல்லும் கால்வாய் வழியாக, அடையாற்றில் கலந்து வந்தது.இந்த கால்வாய், ஆக்கிரமிப்புகளால் மறைந்து விட்டது.





மவுன்ட்- - பூந்தமல்லி சாலை வழியாக, ஒரு மதகு மூலம், உபரி நீர் வெளியேறி, சாலையை ஒட்டி செல்லும் கால்வாயில் சென்று, ராமாபுரம் அருகே அடையாற்றில் இணையும். இந்த இரண்டு கால்வாய்களும், 15 ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கின. இதனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும், போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், எந்த வழியிலும் வெளியேற முடியாத நிலையில், மதனந்தபுரம், கொளுத்துவாஞ்சேரி, முகலிவாக்கம், அய்யப்பன்தாங்கல் என, 15 கிராமங்களை சூழ்ந்து நிற்கும்.தைலமரம் அருகேசெயற்கையாக கால்வாய் வெட்டி, நாள் கணக்கில், இந்த மழை நீர் வெளியேற்றப்படும்.





போரூர் ஏரி உபரி நீரை, மணப்பாக்கம் கால்வாய் வழியாக, அடையாற்றுக்கு கொண்டு செல்ல, 2009ல், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், போக்கு கால்வாய் கட்ட, பொதுப்பணித்துறை தீர்மானித்தது.இதையடுத்து, மவுலி வாக்கம் தைலமரம் அருகே, புதிய கலங்கள் கட்டப்பட்டன.இந்த கலங்கலில் இருந்து, மணப்பாக்கம் கால்வாய் சந்திப்பு வரை, 1.10 கி.மீ., துாரம் வரை, தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச்சாலையில், கோவூர்,- பரணிபுத்துார் அணுகுசாலையை ஒட்டி, 15 அடி அகலம், 7 அடி ஆழத்தில், புதிதாக கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.




இந்த கால்வாயுடன், மணப்பாக்கம் கால்வாயை, 6 கி.மீ., துாரத்திற்கு சீரமைக்கவும் திட்டமிடப்பட்டது. அதற்காக, 45 கோடி ரூபாய்க்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, 2013 - 14ல் பணிகள் துவங்கின. மொத்தம், 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு, தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம், முறையான அனுமதி பெறவில்லை என, அத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ரூ.20 கோடிஇதையடுத்து, கால்வாய் கட்டும் பணி, பாதியிலேயே கைவிடப்பட்டது. நான்கு ஆண்டுகளாக, இந்த பணி கிடப்பில் உள்ளது. இதனால், போரூர் ஏரி உபரி நீர் கால்வாயை, மணப்பாக்கம் கால்வாயில் இணைக்கும் திட்டம், இழுபறியில் நிற்கிறது.




இந்நிலையில், ஓராண்டிற்கு முன், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், கால்வாய் அமைக்க, தடையில்லா சான்று வழங்கப்பட்டது.விடுபட்ட பணிகளை பூர்த்தி செய்ய, 20 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசு அனுமதிக்காக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுப்பினர்.ஆனால், இன்னும் நிதி ஒதுக்கப்படாததால், 2013ல் துவங்கிய திட்டம், இன்னும் இழுபறியில் உள்ளது.இதனால், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தில், அய்யப்பன்தாங்கல், முகலிவாக்கம், மதனந்தபுரம் என, 15க்கும் மேற்பட்ட கிராமங்கள், வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




உபரி நீர் கால்வாய் பணியால், சேதமடைந்த, கோவூர் -- பரணிபுத்துார் இடையேயான, புறவழிச்சாலையின் அணுகுசாலை, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. வடிகால் பணி கிடப்பில் போடப்பட்ட நாள் முதல், இன்று வரை, அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, இப்பணியின் முக்கியத்துவம் கருதி, போரூர் ஏரி உபரிநீர் கால்வாய் பணிக்கான நிதியை ஒதுக்கி, பணிகளை விரைந்து முடிக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.போரூர் ஏரி உபரி நீர் கால்வாய் பணிகளுக்கு, தேசிய நெடுஞ்சாலைத் துறை, தடையில்லா சான்று வழங்கி உள்ளது.




விடுபட்ட பணிகளை பூர்த்தி செய்ய, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம். விரைவில், நிதி கிடைக்கும். பணிகள் துவக்கப்படும்.முத்தையா, மேற்பார்வை பொறியாளர், பொதுப்பணித்துறைகிளை கால்வாய்கள் மீட்கப்படுமா?போரூர் ஏரி கால்வாய், மவுலிவாக்கம், பெரியப்பணிச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், முகலி வாக்கம், மதனந்தபுரம், மணப்பாக்கம் வழியாக அடையாற்றில் கலக்கிறது. இதில், கெருகம்பாக்கத்தில் இருந்து, 2 கி.மீ., துாரத்திற்கும், கொளப்பாக்கத்தில் இருந்து, 1.8 கி.மீ., துாரத்திற்கும், கிளை கால்வாய்கள் செல்கின்றன.இந்த கிளை கால்வாய்களில், 700 அடி துாரத்திற்கு மட்டுமே, கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து உள்ளன.




மீதமுள்ள பகுதிகளில், கிளை கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த கிளை கால்வாய்களை சீரமைத்தால், போரூர் ஏரி உபரி நீர் செல்ல, ஏதுவாக இருக்கும்.கொள்ளளவு உயர்வு!போரூர் ஏரி, மீண்டும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதாக, நம் நாளிதழ், தொடர்ந்து சுட்டிக்காட்டியது. இதையடுத்து, 2012ல், போரூர் ஏரியை துார் வாரி ஆழப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும், 20 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கியது. இதனால், 46 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்த போரூர் ஏரி, தற்போது, 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில், கொள்ளளவு உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X