| அருவியில் நீர்வரத்து அதிகம்: குளிப்பதற்கு தடை நீடிப்பு Dinamalar
அருவியில் நீர்வரத்து அதிகம்: குளிப்பதற்கு தடை நீடிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
23:30

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு குரங்கு அருவியில் நீர் வரத்து குறையாமல் உள்ளதால், 13வது நாளாக தடை நீடிக்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு குரங்கு அருவி, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் இருந்து குரங்கு அருவிக்கு நீர் கிடைக்கிறது.


தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக, வால்பாறை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த, 7ம் தேதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.வால்பாறை சுற்றுப்பகுதிகளில் மழை பொழிவு குறைந்து உள்ளது. ஆனாலும், சோலைக்காடுகளில் இருந்து வெளியேறும் நீர், அருவியில் கொட்டுகிறது. இதனால், 13வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. வனத்துறைக்கு ஐந்து லட்சம் ரூபாய் நுழைவுக்கட்டண வசூல் பாதித்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X