கோவை:செல்வபுரம், தேவேந்திர வீதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 72. இவர் நேற்று முன்தினம் செல்வபுரம், சிவாலயா சந்திப்பு பஸ் ஸ்டாப் அருகே பேரூர் மெயின் ரோட்டில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி மோதியதில், படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய திருச்சி, முசிறியை சேர்ந்த மினி லாரி டிரைவர் தர்மராஜன், 35 மீது போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.