கோவை:கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'இளமை இனிமை இதோ' என்ற இன்னிசை நிகழ்ச்சி, கிக்கானி பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக சங்கீதம், கஜல் மற்றும் திரை இசைப் பாடல்கள் என, மூன்று வகையான பாடல்கள் பாடப்பட்டன. தீபிகா வரதராஜன், ஷ்ரவன் ஆகியோர் பாட, ரங்கப்ரியா, ராம் மற்றும் பெர்குஷன் மார்டின் ஆகியோர் இசை அமைத்தனர். இந்த நிகழ்ச்சி வழக்கமான இசை கச்சேரி போல் இல்லாமல், கர்நாடக சங்கீதம், கஜல், திரையிசை பாடல்களின் சங்கமமாக இருந்ததால், இசை ரசிகர்கள் கைதட்டி ரசித்தனர். நிகழ்ச்சியின் இடையே பாடல்களை பற்றிய சுவாரசியமான தகவல் தெரிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.