| ஓட்டலில் சூதாட்டம் :16 பேர் தடாலடி கைது Dinamalar
ஓட்டலில் சூதாட்டம் :16 பேர் தடாலடி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
23:59

கோவை:ஓட்டலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, 16 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை, டவுன்ஹாலில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உக்கடம் போலீசார் குறிப்பிட்ட ஓட்டலில், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தர்மராஜ், 36, அப்துல் அமீர், 39, பொன்னுசாமி, 65, அப்துல் ஹக்கீம், 33, பைசல், 32, சுந்தர், 42, இப்ராகீம், 27, சரவணமுகேஷ், 36, முகமது ஆசிக், 28, அப்பாஸ், 40 உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 54 ஆயிரத்து, 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X