பாம்புகளுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பழங்குடியினர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
00:26

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மேல பார்த்திபனுார், லீலாவதி நகர் கிராமங்களில் வாழும் பழங்குடி காட்டு நாயக்கர் இன மக்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு நாகப் பாம்புகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு நிறுவனர் மகேஸ்வரி தலைமையில் காட்டு நாயக்கர் இன மக்கள் கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு அளிக்க பாம்பகளுடன் நேற்று காலை வந்தனர். அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் வாழும் பழங்குடி இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவது பெரும் பிரச்னையாக உள்ளது. 2001ல் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மானுடவியல் பேராசிரியர்களின் மூலம் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமங்களை ஆய்வு செய்து அந்த ஆய்வறிக்கை அடிப்படையில் ஜாதி சான்றிதழ்களை வழங்கலாம், என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் காட்டு நாயக்கன் இன மக்கள் அதிகமாக வாழும் மதுரை, சிவகங்கை துாத்துாக்குடி, திண்டுக்கல், திருச்சி, கோவை மாவட்டங்களுக்கு பழங்குடி ஆராய்ச்சி மைய இயக்குனர் நேரடியாக சென்று ஆய்வு செய்து அனைத்து மாவட்டங்களிலும் எந்த தடையும் இல்லாமல் எஸ்.டி., பிரிவில் காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ்களை வழங்கி உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கு மேல் காட்டுநாயக்கர் மக்கள் வாழ்கின்றனர். அதிகமாக வாழும் மேலப்பார்த்திபனுார், பரமக்குடி தாலுகாவில் உள்ள லீலாவதி நகர் உள்ளிட்ட கிராமங்கள் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களில் வாழும் மக்களின் குழந்தைகள் ஜாதி சான்றிதழ்கள் பெற முடியாமல் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பின்தங்கி உள்ளனர்.எனவே ஜாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும், என்றார். பாம்புகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பழங்குடியின மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் வீரராகவ ராவிடம் வழங்கினர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X